www.hrdaro.com
பாபாவின்
உறுதிமொழிகள் உறுதியானவை.
இந்த
உறுதிமொழிகளில் நம்பிக்கை வையுங்கள்.
கண்டிப்பாக எண்ணங்கள் கைகூடும்.
1.
பக்தர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதில் என்னுடைய தன்மை மிகச் சுலபமானது.எவ்வளவு அதிகமாக என்னை நேசிக்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு பயனடைகிறார்கள். என் வார்த்தையை கவனித்தால் கண்டிப்பாக உன் எண்ணங்கள் கைகூடும்.
2.
நீ எதை விரும்பி கேட்டாலும் அந்த விருப்பம் நியாயமாக இருந்தால் கண்டிப்பாக அதை நிறைவேற்றுவேன். என்னுடைய எலும்பும் உனக்கு பதில் பேசும்.
3.உண்மையை பேசி அதை கடைப்பிடித்தால் நான் சரியான சமயத்தில் காப்பாற்ற முன் வருவேன்.
4.உண்மையே உன் உருவமானால் என்னுடைய தலையை கொடுத்தாவது உன் கஷ்டங்களை போக்கி வைப்பேன். உன் இதயத்தில் உட்கார்ந்து உன்னை கவனித்து உன்னையே பார்த்து வருவேன்.
.உன் விருப்பங்கள் எல்லாம் என்னிடம் உள்ளது. எதை வேண்டுமானாலும் கேள். ஆனால் நியாயமானதாக இருக்கட்டும். அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் எல்லா வகைகளிலும் முடித்து தருவேன்.எப்படி என்று கேட்காதே.உன்னால் அறிந்து கொள்ள முடியாத வகையில்,கண்டுபிடிக்கமுடியாத வகையில் செய்து முடிப்பேன்.
6.சீரடியின் மண்ணில் கால் வைத்தவுடன் உன் கஷ்டங்கள் எல்லாம் தீரும்.
7.என் பக்தர்களின் வீட்டில் எல்லாம் நிறைந்திருக்கும்.வேண்டியது இல்லாமலிருக்காது.
8.பொய் பேசுபவனுக்கும், ஏமாற்றுபவனுக்கும் என்னுடைய பதில் காரமாக இருக்கும்.
9.உன்னுடைய சுமைகளை என்மீது இறக்கி வைத்தால் நான் சுமக்க தயாராக இருக்கின்றேன்.
10.என்னை நோக்கி நீ ஆச்ரயித்தால் நான் உன்னை ரட்சிப்பேன்.
11.என்னுடைய சமாதியில் முதல் படியில் கால் வைத்தவுடன் உன்னுடைய பூர்வ கர்ம பலன்கள், பாவங்கள் தொலைகின்றன.
|